சிங்கம்புணரி அருகே மேலும் இருவருக்கு கொரோனா!
கொரோனா இரண்டாம் அலை ஆரம்பித்த பிறகு சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கொரோனா தொற்றால் இதுவரை நான்கு பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
தற்போது சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த 35 வயது ஆணும், முறையூரில் 75 வயது மூதாட்டியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு மற்றும் அவரது தலைமையிலான சுகாதாரத்துறையினர் சிங்கம்புணரி சுற்றுவட்டார மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ராயல் ஹமீது ,அப்துல்சலாம்.
Comments