வால்பாறைக்கு சுற்றுலா வர தடை!!
கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையையும் மீறி சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் வால்பாறை மக்கள்.
இந்நிலையில் ஆழியார் சோதனைச்சாவடியில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை செல்லும் பயணிகள் நான் வால்பாறையில் தான் இருக்கிறேன் என்பதை உறுதி செய்திட ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே மேற்கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
-M.சுரேஷ்குமார்.
Comments