மேலூர் அருகே தலைமைக் காவலர் தற்கொலை!

  -MMH

கீழவளவு காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருபவர், ராமச்சந்திரன் என்பவரின் மகன் செல்வம்(38). இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு 11 வயதிலும் 9 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். செல்வம் தொடர்ச்சியான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு செல்வத்திற்கும் அவரது மனைவிக்குமிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி நித்யா, அவரது சொந்த ஊரான மதுரை ஊர்மெச்சிகுளத்துக்கு சென்றுவிட்ட நிலையில், செல்வம் மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று (27-04-21) அதிகாலை சுமார் 12 மணி அளவில் செல்வத்திற்கு வயிற்று வலி வேதனை அதிகமானதாகத் தெரிகிறது. இதன்பின்பு வீட்டிலிருந்த சீலீங் பேனில் தனக்குத் தானே சேலையினால் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதை அவரது மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தலைமைக் காவலரின் தற்கொலை குறித்து, மேலூர் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் விசாரணை செய்தார்.

- பாரூக், சிவகங்கை.

Comments