பொள்ளாச்சியில், முன்னாள் கவுன்சிலர் வீட்டில் ரெய்டு..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி மாரியப்பன் வீதியில், அ.தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக முன்னாள் கவுன்சிலர் முருகன் வீட்டில் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தேர்தல் செலவின பார்வையாளர் ராம் கிருஷ்கெடியா, தேர்தல் நடத்தும் அலுவலர் வைத்திநாதன் ஆகியோர் சோதனை நடத்தப்பட்ட பகுதிக்கு வந்து அதிகாரிகளிடம் விசாரித்தனர்.
தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், "கணக்கில் வராத, ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 600 ரூபாய், மொபைல்போன் எண் மற்றும் வாக்காளர் பெயர் கொண்ட நோட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது" என்றனர்.
தேர்தல் செலவின பார்வையாளர் கூறுகையில், ''தேர்தல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகம் உள்ளவர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்கிறோம்,'' என்றார்.நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி.
Comments