மூடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளியின் சோகநிலை!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட வால்பாறை  மூடீஸ் அரசு மேல்நிலைப்பள்ளி 1961 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இப்பள்ளியில் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் 29 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இப்பள்ளி வனப்பகுதியின் மத்தியில் இருப்பதாலும்,வன விலங்குகளின் தொல்லை இருப்பதாலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் இப்பள்ளி கடந்த 2019ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இப்பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில்  மூடப்பட்ட பள்ளி மீண்டும் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில், இப்பகுதியில் உள்ள மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம்:

இப்பள்ளி 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தற்போது மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இந்த இடத்தில் ஐ டி ஐ பாலிடெக்னிக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்கின்றனர். மேலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் வேலைவாய்ப்புக்கான தொழில் கல்வி படிக்க இப்பள்ளியை தமிழக அரசு தொழில் பயிற்சி கூடமாக மாற்ற வேண்டுமென்பது இப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

-திவ்ய குமார், வால்பாறை.

Comments