இந்தியாவில் கொரோனா பாதிக்காத கிராமம்!!

   -MMH

இந்தநிலையில் மத்திய பிரேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனாவால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரேச மாநிலம் சிக்லஹார் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் இது போன்ற கொடிய நோயான குர்ஆனிலிருந்து மக்கள் அனைவரையும் அவர்கள் காத்து வருகின்றனர். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கொரோனோ காலகட்டம் தொடங்கிய முதல் நாளில் இருந்தே அந்த கிராம மக்கள் தங்களுடைய கிராம எல்லைகளை யாரும் வெளியாட்கள் நுழையாதபடி விடிய விடிய பாதுகாப்பு பணியில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அவர்கள் கிராமங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அந்த கிராம இளைஞர்களை ஒரு குழுக்களாக அவர்கள் நியமித்து இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமே அந்த கிராமத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும். பிறகு வெளியில் சென்றுவிட்டு கிராம எல்லைப் பகுதியிலேயே அவர்கள் கொரோனோக்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி தங்களுடைய உடலை சுத்தம் செய்த பின்னரே கிராமத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

இதன் மூலம் தற்போது ஒருவர் கூட அந்த கிராமத்தில் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படவில்லை என்று அந்த கிராம மக்கள் மிக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். "நாட்டு மக்கள் தங்களை தாங்களே கட்டுப்பாட்டுடன் தனிமை படுத்தி சுகாதார துறையின் விதிமுறைகளை பின்பற்றினால் நாமும் கொரோனா இல்லா உலகை படைப்போம்".

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், V. ஹரிகிருஷ்ணன்.

Comments