நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்!! ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!

    -MMH

கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆயுதப்படை காவலர் அன்பரசன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கொலை செய்துக் கொண்ட அன்பரசன் மாவட்ட நீதிபதியின் காவலராக பணிபுரிந்து வந்தார்.

 கிருஷ்ணகிரியில் உள்ள ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றமும், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் நீதிமன்றமும் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக கலை என்பவர் உள்ளார். கிருஷ்ணகிரி பூந்தோட்டத்தை சேர்ந்த அன்பரசன் என்ற ஆயுதப்படை காவலர், நீதிபதிக்கு பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் அன்பரசன், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மக்கள், நீதிமன்றத்தில் கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நீதிமன்ற கட்டடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலர் அன்பரசனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அவருடன் பணிபுரிந்த சக காவலர்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாகவே அன்பரசன் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், எதோ ஒரு விரக்தியுடன் காணப்பட்டதாகவும், அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை எனவும் கூறுகிறார்கள். ஆனால் உரிய விசாரணைக்குப் பிறகே முழு விவரம் தெரியவரும். தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டிடத்திற்குள்ளேயே ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்க்குமார்.

Comments