கோவை - கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடா..?
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.இரண்டாவது அலை வீசத் தொடங்கி உள்ளதால் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்காக கோவை மாநகராட்சி சார்பில் நடமாடும் மொபைல் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பலரும் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் ஒரு சில இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விரைவில் தடுப்பூசி வந்துவிடும். இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் என்று கூறினார்.
-அருண்குமார்.
Comments