விபத்தை தடுக்கும் நோக்கில் போட்ட பாலம்!! பயணிக்காத மக்கள்..!!

  -MMH

கோவை மாவட்டம் குனியமுத்தூர் வகாப் பெட்ரோல் பங்க் அருகில் மக்கள் பயன்பாட்டிற்காக அரசு விபத்துகளை தடுக்கும் நோக்கில் போடப்பட்ட இந்த பாலத்தில் மக்கள் பயன்படுத்த வில்லை என்று கூறப்படுகிறது.

பல லட்சங்களை செலவு செய்து இந்த இரும்புபாலத்தை போட்டிருக்கும் அரசு,  மக்கள் பயன்படு இல்லாததால் இரவு நேரங்களில் நாய்களும் அங்கே தங்கி வருகின்றன. பல சமூக விரோதிகள் அந்த பாலத்தை பயன்படுத்துவதாகவும்  கூறப்படுகிறது.

பகல் நேரங்களில் குடிமகன்கள் குடியிருக்கும் கூடாரமாக மாறியுள்ளது. இந்த நிலை மாற மக்கள் அனைவரும் அந்த பாலத்தை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-நந்தகுமார், ஈசா.

Comments