ஹரித்வார் புனித நகரமே பெரும் அச்சத்தில்..!!
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறது. இங்கு நடக்கும் கும்ப மேளா மிகவும் பிரசித்தி பெற்றறு கொண்டாடப் படுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து புனித நீராடி கும்ப மேளாவில் கலந்து கொள்வது வழக்கம்.
தற்போது நடைபெற்ற கும்பமேளாவில் லட்ச கணக்கானோர் புனித நீராட வந்திருந்தனர். இதில் பொது மக்கள் சாதுக்கள் என பலலட்சம் பேர் ஒரே இடத்தில் திரண்டதால் கொரோனாகால கட்டுப்பாடுகளை உத்திரகாண்டு மாநில அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஹரித்வாரில் முகாமிட்டிருந்த நிர்வாண சாதுக்களின் அமைப்பான மகாநிர்வாணி அகாடாவின் தலைவர் (மகாமண்டலேஸ்வர்) கபில் தேவ் தாஸ் (65) கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கபில்தேவ் தாஸ் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வட இந்திய இந்துக்களால் கடவுள்களின் அம்சங்களாக போற்றப்படுகிற சாதுக்களின் தலைவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரிகிருஷ்ணன், அனஸ், கோவை.
Comments