சிட்லபாக்கம் குரோம்பேட்டை இடங்களில் காலியாகும் கிணறுகள்!! தண்ணீர் இல்லாமல் தவிக்கும் மக்கள்!!!

   -MMH

சென்னை குரோம்பேட்டை சிட்லபாக்கத்தில் அமைந்துள்ளது அஸ்தினாபுரம் தண்ணி எடுக்கும் கிணறுகள். இதில் தினந்தோறும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த கிணற்றை சொந்தமாக வைத்திருப்பவர்கள் தண்ணீரை அரசு அனுமதியின்றி விற்று வருகின்றனர். இதை பல்லவபுரம் மாநகராட்சி மற்றும் தமிழக அரசு மற்றும் காவல்துறை கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்ள மறுக்கிறது. 

இதை உடனே மாநகராட்சிக்கு தெரிவித்து வரும் காலங்களில் நிலத்தடி நீரை எங்களுக்கு சேமித்து தருமாறு ஊர் மக்கள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments