கோவை வடவள்ளியில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை!!
கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவசாய கல்லூரியில் பேராசிரியராக ஆனந்தன் பணியாற்றி வருகிறார். இவர் கோவையை அடுத்த வடவள்ளி-சிறுவாணி சாலையில் உள்ள மகாராணி அவென்யூ சேர்ந்தவர்.
சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார்.வீட்டிற்குள் பார்த்தபோது அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இது குறித்து தகவல் அறிந்த பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு தலைமையில் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
-அருண்குமார்,கோவை மேற்கு.
Comments