நாளைய வரலாறு தலைமை நிருபர் மரணம்!!
கோவை: நமது நாளைய வரலாறு பத்திரிகையில் தலைமை நிருபராக பணியாற்றி வரும் கிரி (50) என்பவர் உடல் நல குறைவால் இன்று (7.4.2021) அதிகாலை இரண்டரை மணி அளவில் கோவை அரசு மருத்துவமனையில் இறைவனிடம் சென்றடைந்தார்.
அவரது மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் நாளைய வரலாறு குடும்பத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுநீரக பாதிப்பு இருந்தும் டயாலிசிஸ் முறையில் இரண்டு ஆண்டுகாலம் தன்னுடைய விதியை நீடித்து வாழ்ந்து வந்தவர் கிரி அவர்கள்.
நாளைய வரலாறின் தலைமை நாயகனே...! தினந்தோறும் பணியாற்ற ஊக்கம் கொடுக்கும் சிறந்தவனே...! எந்த நேரத்திலும் அழைத்தாலும் உடல்நிலை சரி இல்லாவிட்டாலும் ஓடோடி வந்து ஊக்கம் கொடுத்த உழைப்பின் உண்மையானவனே....! கொடுத்த வேலையை முடிக்காவிட்டால் பாகுபாடின்றி பழி சொல்லும் பண்பாளனே..! இவ்வுலகில் நீ பணியாற்றியது போதுமென்று இறைவன் அழைத்தானோ.. ? எங்கள் நாளைய வரலாறு குடும்பத்தை தவிக்க விட்டு மீளா துயரத்தில் ஆழ்த்தி சென்றவனே....... உன் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் நாளைய வரலாறு....
-என்றென்றும் உன் பிரிவால் வாடும் நாளைய வரலாறு குடும்பம்.
Comments