காரமடை அருகே ஆண் சிறுத்தை மரணம்..! வனத்துறை தீவிர விசாரணை.!!

-MMH 

                      ன்று  காலை காரமடை வன சராகம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வனப்பணியாளர்கள் ரோந்து செல்லும்போது துர்நாற்றம் வீசியதை அறிந்த பணியாளர்கள் உடனடியாக, காரமடை வனச்சரகருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

அதன் பேரில் தீவிர தேடுதலில் ஈடுபட்ட போது, மானார் பிரிவு சுற்றுக்குட்பட்ட போட்டுக்கடவு சராகம், பசுங்கனிமேடு பகுதியில் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் பிரேதம் கைப்பற்றப்பட்டது. அந்த ஆண் சிறுத்தையை  பிரேதப்பரிசோதனை செய்ய இன்று காலை சுமார் 7.30 மணிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

-ஸ்டார் வெங்கட்.

Comments