பெண்மயில் மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது!! - சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து காவல்துறையினர்!!
கோவை மாவட்டம் போத்தனூர் மேட்டூர் சாலையில் நேற்று இரவு பதினொன்று முப்பது மணி அளவில் பெண்மயில் ஒன்று எதிர்பாராத விதமாக மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து உயிரிழந்த அந்த பெண் மயிலை மீட்டுள்ளனர். பின்பு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உயிரிழந்த அந்த மயிலை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய பறவை என அழைக்கப்படும் இந்த பெண் மயில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஈஷா,கிரி.
Comments