சாலைப் பணியை விரைவில் முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை!!

   -MMH

கோவை மாவட்டம்:    வேலாண்டிபாளையம் கணுவாய் சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடை மறுசீரமைப்பு பணியால் மக்கள் அவதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை பணி நடைபெற்று முடிந்தது. பாதாள சாக்கடை மேல் மூடியை சரியாக இல்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன் மறுசீரமைப்பு பணி நடைபெற்றது.

ஆனால், மேல் மூடி தரமான முறையில் இல்லாததால் மீண்டும் இப்பொழுது  மூடி சரி செய்யும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் கனரக வாகனம் மற்றும் பேருந்துகள் இதன் வழியாகத்தான் இப்பொழுது செல்கிறது . எனவே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மாற்றுப்பாதையில் நான்கு சக்கர வாகனமும் கனரக வாகனம் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே தரமான முறையில் மிக விரைவில் இப் பணியை செய்து முடிக்க வேண்டும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-கண்ணன், துடியலூர்.

Comments

Pradeep Sulur said…
விரைவாக முடித்தால் நன்று.
Pradeep Sulur said…
விரைவாக முடித்தால் நன்று.