சிங்கம்புணரி சாலைகளில் முகக்கவசமின்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்!

 -MMH

கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி  வரும் நிலையில், முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறும்,கூட்டங்களைத் தவிர்க்குமாறும் தமிழக அரசின் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.


மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும், முகக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள், கடைகள், சந்தைகள் மற்றும் பேருந்துகள் என சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரியிலும் வட்டாட்சியர், காவல்துறையினர், சுகாதாரதுறையினர், பி.டி.ஓ மற்றும் பேரூராட்சியினர் என திடீர் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் பி.டி.ஓ ரெத்தினவேல் தலைமையில் இரு சக்கர வாகன ஓட்டிகள், கார்கள் என சோதனை மேற்கொண்டனர்.

இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த 12 நபர்களுக்கு தலா ₹.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி காவல் துணை ஆய்வாளர் ஜானகிராமன் வாகன சோதனையின்போது உடன் இருந்தது குறிப்பிடதக்கது.

- அப்துல் சலாம்.

Comments