கோவை மதுக்கரை பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்!!

    -MMH

கோவை மாவட்டம் மதுக்கரை சிறப்புநிலை பேரூராட்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுக்கரை பேரூராட்சி கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக மதுக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேரூராட்சியின் வாகனத்தின் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முஸ்லிம் காலனி, காந்தி நகர் மற்றும் குவாரி ஆபீஸ் ஆகிய இடங்களுக்கு காலை முதலே பேரூராட்சியின் ஊழியர்கள் மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஷாஜகான், மதுக்கரை.

Comments