மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு குவியும் பாராட்டுகள்!!

   -MMH

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயன்முறை மருத்துவப் பிரிவில் (பிசியோதெரபி பிரிவுக்கு) புதிய நவீன கருவிகள் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகள் நேற்றுமுதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுமக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கண் சிகிச்சைக்கு என தனியாக பார்வைத்திறன் அறியும், அறையும், கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கு தனி அறையும் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனுடன் சேர்ந்து அரசு மருத்துவமனையில் செயல்படும் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு, யோகா, உடற்பயிற்சி கூடம், சித்த மருத்துவ பிரிவு மற்றும் சித்த மருந்தகம் ஆகியவற்றுக்கும் தனித்தனி அறைகள் திறக்கப்பட்டன. இதனை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் என். விஜயகுமார் அவர்கள். குத்துவிளக்கேற்றி புதிய அறைகளை திறந்து வைத்தார்.

அத்துடன். பிசியோதெரபி பிரிவுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட கருவிகளின் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்து. இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவர் எம். கோவிந்தராஜ், அவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் செல்வம், இயன்முறை மருத்துவ பயிற்சியாளர்

எம்.மணிவண்ணன் அவர்கள் கூறும்போது. மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிக அளவில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக நோயாளிகள் வருகின்றனர். அவர்களை விரைவில் குணப்படுத்த ஏதுவாக எலும்புகளின் செயல்திறனை விரைவுபடுத்தும் நவீன கருவிகள் தனியார் மருத்துவமனைக்கு நிகராக தற்போது நிறுவப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதனை தயக்கமின்றி பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.தாங்கள் எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் அதன் பின்னர் செய்ய வேண்டிய அனைத்து இயங்கு பயிற்சிகளும் இலவசமாக இனி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள நமது பிசியோதெரபி கருவிகளைக் கொண்டு கொடுக்கலாம் என்றார், இதனை சரியாக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் .

கண் மருத்துவ பிரிவு தொழில்நிபுனர் திரு. குணசேகரன் அவர்கள் கூறியதாவது. பார்வைத்திறன் பரிசோதனை அறை இல்லாத காரணத்தால் கண் சிகிச்சை பெறும் நோயாளிகள் பார்வை திறனை அறியவும், கண்ணாடி போடுவதற்கும் கடந்த 15 ஆண்டுகளாக சிரமம் அடைந்து வந்தனர். தற்போது மன்னார்குடி மருத்துவமனையிலேயே அனைத்து வகையான கண் பரிசோதனைகளையும் செய்திட வசதியாக திறக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இந்த நிகழ்வுகளின் மூலம் திருவாரூர் மாவட்ட தலைமை மருத்துவமனையாக உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனை மக்கள் மத்தியில் புதிய நன்மதிப்பை பெற்றுள்ளது என்று கூறலாம்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ரைட் ரபீக், மன்னார்குடி.

Comments