பேருந்து நிறுத்தத்தில் சிக்கலை உருவாக்கும் சிக்னல்!!

     -MMH

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் ஈச்சனாரி அடுத்து உள்ள எல்&டி நான்குமுனை கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக செல்லும் பேருந்துகள் நான்குமுனை, நான்கு முனை சந்திப்பை கடந்து உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி ஏற்றி செல்கிறது. இவ்வாறு பேருந்தை நிறுத்தும் போது பின்னால் வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது .மேலும் பச்சை நிற சிக்னல் முடியும் தருவாயில் வரும் வாகனங்கள் சிக்னலை விரைவாக கடந்து சென்றுவிட நினைத்து வேகமாக வருகின்றன.

இது போன்ற சமயங்களில் முன்னால் செல்லும் பயணிகள் பேருந்து நின்று பயணிகளை ஏற்றி இறக்கும் போது பின்னால் வரும் வாகனங்கள் சாலையை கடந்து செல்வதற்குள் சிகப்பு சிக்னல் விழுந்து விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் காக்கா சாவடி வழியாக வரும் வாகனங்கள் பச்சை சிக்னல் கிடைத்தவுடன் கிளம்பி விடுகின்றனர். இது சமயங்களில் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே சிக்னல் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை சிறிது தூரம் தள்ளி ஏற்படுத்தி தருவார்களா என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

-ராஜேந்தர்.

Comments