அம்மாபேட்டை பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக தீவிர வாக்கு சேகரிப்பு!!

     -MMH

அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திராவிட கட்சியின் ஒன்றியச் செயலாளர் திரு பி. எஸ். குமார் அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்  பேராசிரியர் திரு.  ஜவாஹிருல்லா அவர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகம்:

50க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் திரு கிஷோர் திரு சண்முகவேல் திரு பிரேம்குமார் திரு பழனி மற்றும்  மற்றும் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று  உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்குகள் சேகரித்தனர். அப்பொழுது  ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களிடம் அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த குறைகளை சரி செய்வதாக. ஒன்றிய செயலாளர் திரு பி. எஸ். குமார் அவர்கள்  உறுதிமொழி தந்தார்.

கிராமந்தோறும் அவருக்கு சிறப்பாக ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்து தனது பரப்புரையை கழகச் செயலாளர் மேற்கொண்டார்.


நாளைய வரலாறு செய்திக்காக,

- V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments