சிங்கம்புணரியை மகிழ்வித்த மழை!
தமிழ்நாடு முழுவதும் நிலவும் வறண்ட வானிலையின் காரணமாக வெப்பநிலை அதிகரித்து, வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக சிங்கம்புணரியில் வெப்பநிலை சதமடித்து கொண்டிருக்கும் நிலையில், மழைக்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.
மாலை ஐந்து மணியிலிருந்து மழை காற்று வீசிக்கொண்டிருந்த நிலையில், மாலை சுமார் ஆறரை மணி அளவில் மழை ஆரம்பித்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.சுமார் அரை மணி நேரம் பெய்த மழை, சிங்கம்புணரி மண்ணை குளிர்வித்தது, மக்களை மகிழ்வித்தது.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments