கொரோனாவால் பாதிக்கப்படாத ஒரே கிராமம்!!

    -MMH

கொரோனாவால் நாடு முழுவதும் உள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் சூழலில் மத்திய பிரேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கொரோனாவால் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்லஹார் (CHIKHALAR) கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தான், அப்பகுதி மக்களை கொரோனாவில் இருந்து காத்து வருகின்றனர். கொரோனா பரவல் தொடங்கியது முதலே அக்கிராம எல்லை முழுவதும் தடுப்புகளை அமைத்துள்ளனர். இதையடுத்து வெளியாட்கள் யாரும் நுழையாதபடி, அங்குள்ள பெண்கள் விடிய விடிய கிராம எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் இரு இளைஞர்களை கிராம மக்கள் நியமித்து, அவர்கள் மட்டும் வெளியே சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர். இதன் மூலம் தற்போது வரை ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

-சுரேந்தர்.

Comments