கோவை மாவட்ட தமுமுக சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் கோரிக்கை மனு!!!

     -MMH

     தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் காரணமாக அதிகரித்து வரும் பாதிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புனித ரமலான் மாதம் வரும் 14ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், இந்த கட்டுப்பாட்டினால் ரமலான் மாத இரவு தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத நிலை உருவாகும்.

எனவே, சிறுபான்மை முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்குப் பதிலாக இரவு 10 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஹைதர்அலி சாஹிப்) சார்பில் கோவை மாவட்ட தலைவர் R.M.ரபி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலாளர் பெரோஸ்கான், மாவட்ட துணை செயலாளர்கள் செல்வபுரம் நசீர், செல்வபுரம் இப்ராஹீம் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபீக், மாவட்ட வழக்குறைஞர் அணி செயலாளர் ஆரிப் ஆகியோர் உடன் இருந்தனர்!!


நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், தொண்டாமுத்தூர்.

Comments