கோவை வெள்ளலூர் ரோட்டில் சாலை விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு!!

  -MMH

கோவை  வெள்ளலூர்  பகுதியில் ரோட்டில் பைப்லைன் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள், வேலை முடிந்து சரிவர மூடாத காரணத்தினால் சாலை விபத்துக்கள் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். இதை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்யும் கார்ப்பரேஷன் நிர்வாகத்தை கண்டிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வுசெய்து விபத்துக்கள் நடப்பதற்கு முன்பு தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.

-சுந்தர் ராஜேஷ்.

Comments