வெறிச்சோடிய கோவை மாவட்டம் ஊரடங்கை கடைபிடிக்கும் மக்கள்..!!

 

-MMH

கோவை மாவட்டம். கொரோனா இரண்டாம் அலை தாண்டவம் தொடங்கிய நிலையில், மக்களை எப்படியாவது காக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாள் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தியது. தமிழகஅரசு இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள். தங்களுடைய  மிகப்பெரிய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். 

கோவை மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதை பார்க்கும் பொழுது நோய் பரவல் நிச்சயம் குறையும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்படுகிறது. ஆனால், அரசு கொடுக்கும் இந்த ஒருநாள். முழு நேர ஊரடங்கு நோயை கட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

வரும் நாட்களில் மக்கள் தேவைக்கேற்ப வெளியில் சென்று சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முக கவசம் அணிந்தும் அன்றாட தேவைகளான  உணவுப் பொருள் வாங்குவதற்கும் தங்களுடைய பொருளாதார தேவைக்காக வெளியில் செல்வதற்கும் போக நேரிட்டால் மிக கவனமாக சென்று வந்து ஊரடங்கும் நாள்களில் எப்படி நாம் ஒத்துழைப்பு கொடுத்துதொமோ அதே நிலையில், தினந்தோறும் நடந்து கொண்டால் மட்டுமே, இந்த இரண்டாம் கொரோனா நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று அரசும் மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாளையவரலாறு செய்திக்காக,

-பீர்,முகமது, ராஜேஷ், ஈசா.

Comments