திருப்பூரில் ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட முயற்சி! வாலிபர் கைது!

     -MMH

திருப்பூரை அடுத்த படியூர் போலீஸ் செக்போஸ்ட்டில் நேற்று (ஏப்.,11) இரவு போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது, நம்பர் எழுதப்படாத, பைக்கில் சென்ற தஞ்சாவூரை சேர்ந்த கண்ணன், 34, என்பவரை நிறுத்திய போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அவரிடம், கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயக்கான 2,000, 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் இருந்தது.

மேலும், அவரது வீட்டில் ஜெராக்ஸ் எடுத்து கட் செய்யாமல் இருந்த ரூ.72 ஆயிரம் மற்றும் கலர் பிரின்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

-Ln.இந்திராதேவி முருகேசன்,  சோலை. ஜெய்க்குமார்.

Comments