சிங்கம்புணரி சுற்றுவட்டார பகுதியில் மக்கள் அலட்சியத்தால் அதிகரிக்கும் கொரோனா!!

   -MMH

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சிங்கம்புணரி பகுதியிலும் அதன் தாக்கம் வெளியாகத் தொடங்கியுள்ளது. கடந்தவாரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, இன்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

சிங்கம்புணரி அருகிலுள்ள ஒரு ஊராட்சியில் இன்று ஒரே நாளில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல் சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் ஒரு நோயாளியும் மற்றொரு ஊராட்சி பகுதியில் ஒரு கொரோனா நோயாளியும் கண்டறியப்பட்டுள்ளனர். 

பொதுமக்கள் கவனமாக இருந்து நோய்த் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முகக் கவசம் அணிய வேண்டியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியும் சுகாதாரத்துறையினர் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில், இன்று சிங்கம்புணரியில் எல்.ஜே.டெக்ஸ்டைல்ஸ் வளாகத்திலும், அணைக்கரைப்பட்டி மற்றும் பிரான்மலை ஆகிய இடங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டதில் மொத்தம் 111 பேர் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

- சிவகங்கை மாவட்ட நிருபர்கள் குழு.

Comments