சிங்கம்புணரி அருகே கணவன்-மனைவி மீது தாக்குதல்!!

    -MMH

சிங்கம்புணரி அருகே கணவன்-மனைவி மீது தாக்குதல்! 7 பேர் மீது போலீசில் புகார்! சாலை மறியல் - 10 பேர் மீது வழக்கு!

சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் கணவன், மனைவி மீது தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மல்லாக்கோட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(52). இவரது சித்தி ராஜம்மாள், சித்தப்பா முத்து ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். முத்துவுக்கும், ராமகிருஷ்ணனுக்கும் சொத்து தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் முத்துவின் தங்கை மகன் விஜய்ஆனந்த் நேற்று காலை ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று அவரது மனைவி அகிலாவை தாக்கி உள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதோடு ராமகிருஷ்ணனையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயம் அடைந்த இருவரும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்றனர்.

கணவன்-மனைவி தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் ராமகிருஷ்ணனின் உறவினர்கள் ஏரியூரில் இருந்து கீழவளவு செல்லும் நெடுஞ்சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். பின்னர் கணவன்-மனைவியை தாக்கியதாக 7 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. மறியலில் ஈடுபட்டதாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments