சாக்கடை கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் அவதி!!

     -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் காவல் நிலையம் எதிர்புறம், குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீர் தேக்கத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.  இரண்டு தினங்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்நிலையில், சாக்கடை நீரும் மழை நீரும் கலந்து குடியிருப்பு பகுதிக்குள்  தேங்கி இருப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


அதேபோல் முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும், நடந்து செல்வதற்கு கூட வழியில்லாத நிலை காணப்படுவதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் உறிஞ்சும் எந்திரம், கொண்டு தேங்கி நிற்கும்இந்த சாக்கடை நீரை, அகற்றி தரவேண்டுமென்று அங்கு வசிக்கும் மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை வரலாறு செய்திக்காக 

-பீர் முகமது,ஈசா.

Comments