சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவில் பால்குட விழா பக்தர்களின்றி எளிமையாய் நடைபெற்றது!!

    -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அருள்மிகு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலய சித்ரா பௌர்ணமி விழா இன்று அரசின் விதிமுறைக்கு உட்பட்டு நடைபெற்றது. இரண்டாம் அலை கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை அறிவித்துள்ளது. வழிபாட்டுத்தலங்கள் பக்தர்களின்றி பூஜைகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கம்புணரி அருள்மிகு சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலய சித்ரா பௌர்ணமி விழா கோவில் வளாகத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பாலாபிஷேக விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் இந்த சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து நெடுந்தூரம் நடந்து வந்து அபிஷேகம் செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக அரசின் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளால் நேர்த்தி கடன் வைத்து, ஒருசில பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்கள் ஒரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு, மின்மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, சித்தர் முத்துவடுகநாதர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வருடந்தோரும் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா  அரசின் கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு பக்தர்கள் இன்றி மிக எளிமையாய் நடத்தப்பட்டது.

விழா ஏற்பாடுகளை சிங்கம்புணரி வர்த்தகர் நலச்சங்கம் செய்திருந்தது. பால் குடம் எடுத்து வரும் பக்தர்களுக்கு விழாக் கமிட்டி சார்பில் சானிடைசர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments