கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று பேசியதால் மன்சூர் அலிகான் மீது சட்ட நடவடிக்கை!!

    -MMH

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நடிகர் விவேக் ஊசி போட்டுக் கொண்டார். அவரது இறப்பில் வதந்திகளை பரப்ப வேண்டாம். அவரது ஆன்மா சாந்தியடைய வதந்தி பரப்பாமல் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் நடிகர் விவேக் இறப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொரோனா தடுப்பூசி குறித்தும் நடிகர் விவேக் இறப்பு குறித்தும் யாரேனும் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பேசிய மன்சூர் அலிகான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் பிரகாஷ். கொரோனா தடுப்பூசியை யாரும் போட்டுக் கொள்ள வேண்டாம் என வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டதால் அவர் மீது புகார் அளிக்கப்படுகிறது.

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.

Comments