சிங்கம்புணரியில் வரதட்சணை கொடுமை! பெண் தற்கொலை!

      -MMH

சிங்கம்புணரியில் திருமணம் ஆன 10 மாதத்தில், பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெருவில் வசித்துவருபவர் பாண்டி. இவருடைய மகன் ரமேஷ் பாரதி(30). இவருக்கும் வேங்கைப்பட்டியில் உள்ள முருகேசன்-லட்சுமி தம்பதியின் மகளான புவனேஸ்வரிக்கும்(28) கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கணவன் - மனைவிக்கிடையே, திருமண சீராக தரப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் வேறு சில காரணங்கள் சம்பந்தமாக

தொடர்ந்து தகராறு இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கடந்த சனியன்று இரவு புவனேஸ்வரி எலி பேஸ்ட்டை தின்றதால் மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புவனேஸ்வரியின் தாயார் லட்சுமி, சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 10 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

- ராயல் ஹமீது, அப்துல் சலாம்.

Comments