சிங்கம்புணரியில் முழுமையான பொதுமுடக்கம்! பிரதான சாலைகள் வெறிச்சோடின!
தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து கடந்த 20-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி பகுதியையும் விட்டு வைக்காத கொரோனா தொற்றுக்கு இதுவரை 23 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில், சேர்வைகாரன்பட்டி மற்றும் தேனம்மாள்பட்டி இரண்டு கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கட்டுபாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கையடுத்து ஞாயிற்றுகிழமையான இன்று தமிழகஅரசு ஒரு சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கை அறிவித்தது.
முழு ஊரடங்கு நாளான இன்று சிங்கம்புணரியில் பெரியகடைவீதி, பேருந்துநிலையம், திண்டுக்கல் சாலை, காரைக்குடி சாலை, வேங்கைபட்டி சாலை மற்றும் மீன்மார்கெட் என அனைத்து பரபரப்பான முக்கிய வீதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆங்காங்கே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments