மழைநீர் தேக்கத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி..!!

     -MMH

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கன மழையால், துடியலூர் மினி பேருந்து பஸ் நிறுத்தம் அருகில் மழை நீர் அதிக அளவு தேங்கியுள்ளது.

இதனால் அப்பகுதியில்  சுகாதார சீர்கேடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது மேலும், இப்பகுதியில்  மருத்துவமனை இருப்பதாளும். துடியலூர் கணுவாய் செல்ல இதுவே பிரதான வழியாகும் இதனால் மக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து தரவேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

-கண்ணன்,ஈசா.

Comments