வட மாநிலைத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!
செங்கல்பட்டு மாவட்டம் புறநகர் தாம்பரம் அருகே சுடுகாட்டில் உள்ள மரத்தில் வடமாநிலைத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சனிக்கிழமை தாம்பரம் மேடவாக்கம் அடுத்த நன்மங்கலம் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டினுல் உள்ள சுடுகாட்டில் ஒருவர் மரத்தில் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருப்பதாக, ரோந்துப் பணியில் இருந்த வனத்துறை காவலர்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வனத்துறை காவலர்கள் உதவியுடன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து தூக்கில் தொங்கிய நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கபட்டவர் எனத் தெரியவந்துள்ளது. அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக சென்னையிலிருந்து,
-H.முகமது சைஃபுல்லா.
Comments