ஐபோன் தயாரிக்கும்போது பிழை!! லோகோ சற்று தள்ளி அச்சிடப்பட்டது!!!
சமீபத்தில் ஐபோன் தயாரிக்கும்போது ஏற்பட்ட பிழையினால் ஆப்பிள் ஐபோனின் பின்புறம் இருக்கும் ஆப்பிள் லோகோ சற்று தள்ளி அச்சிடப்பட்டது. இது ஆப்பிள் ஐபோன் போன்ற மிக அதிக விலையுடைய போன்களில் மிக மிக அரிதாகவே ஏற்படும் ஒரு பிழைதான்.
ஆனால் இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவ்வாறு தவறாக அச்சடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோவை கொண்ட ஐபோன் அதன் சாதாரண விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்றுள்ளது. ஏனென்றால், இவ்வகையான தவறுகள் ஐபோனில் ஏற்படுவது மிக மிக அரிதாம். எனவே அந்த போன் கிட்டத்தட்ட இரண்டு லட்ச ரூபாய்க்கு விற்றுள்ளது.
அந்தக் குறிப்பிட்ட ஐபோனின் சராசரி விலை 80 ஆயிரம் ரூபாய் ஆகும். ஆனால் இதுபோன்ற தவறுகள் 10 கோடி போன்கள் செய்யும் போது ஒரு போனில் மட்டுமே ஏற்படும் மிக மிக அரிதான பிழை என்பதால், அதுவே ஒரு சிறப்பம்சம் ஆகிப்போனது. இது ஆப்பிள் கம்பெனியின் கடுமையான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை தாண்டி இந்த போன் வெளிவந்துள்ளது இதற்கு இவ்வளவு மவுசு என்று கூறப்படுகிறது!
-கோபி.
Comments