கோட்டூர் பேரூராட்சி சார்பில் தடுப்பணையில் குளிக்க தடை!!

     -MMH

     பொள்ளாச்சி  ஆனைமலை அடுத்த  கோட்டூர் மயிலாடுதுறை தடுப்பணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து எறிவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன என விவசாயிகள் வேதனை அடைந்து வந்த நிலையில் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் கோட்டூர்  பேரூராட்சி நிர்வாகத்திடம்  புகார் மனு  அளித்தனர்.


புகாரின் பேரில் நேற்று முதல் மயிலாடுதுறை தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர் வாசிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊர் எல்லையில் தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி  திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகளும் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்களும்  ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். உரிய பாதுகாப்புடன் எங்களை அனுமதிக்கலாம் என சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இந்நிலையில் கோட்டூர் பேரூராட்சி சார்பில் தடுப்பணையில் குளிக்க தடை அத்து மீறலில் ஈடுபடுபவர்களுக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும். மேலும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை மூலம்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார்.

Comments