ஆலம் விழுது அமைப்பின் சார்பில் விவேக் அவர்களின் நினைவாக பத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு!!

     -MMH
     பொள்ளாச்சி ஆனைமலை ஆலம் விழுது அமைப்பின் சார்பில் மறைந்த சின்னக் கலைவாணர் விவேக் அவர்களின் நினைவாக காந்தி ஆசிரமம் செல்லும் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

பின்பு அப்துல் கலாம் ஐயா மற்றும் விவேக் சார் இருவரும் விட்டுச்சென்ற பணியை சிறப்பாக செய்வோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

இவ்வமைப்பு (ஆலம் விழுது) ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 89 வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனில் அக்கறை கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


-M.சுரேஷ்குமார்.

Comments