வால்பாறை குடியிருப்புப் பகுதியில் குரங்குகள் அட்டகாசம்..!!

     -MMH
     வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் இருக்கின்றன, காமராஜ் நகர் பகுதி துளசிங்க நகர், பகுதி, பிஏபி, ஆகிய பகுதிகளில், வீடுகளுக்குள் புகுந்து வீடுகளில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தி கொண்டு வருகிறது.

இந்த விலங்குகளை பலமுறை பொதுமக்கள் விலங்குகளின் காப்பகத்துக்கு கூண்டு வைத்துப் பிடித்துக் கொள்ளுமாறும்,  வனவிலங்கு காப்பகத்தில் புகார். கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

ஆகவே சிங்கவால் குரங்கு அட்டகாசத்தை தடுத்து நிறுத்தும் வகையில் வனவிலங்கு காப்பகம் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களை காக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- திவ்ய குமார். ஈசா

Comments