நோய்த் தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாத வாக்காளர்கள்! தமிழக எல்லையில் பரபரப்பு!!

-MMH

சட்டசபை தேர்தல் தமிழகம் உட்பட  5 மாநிலங்களில் களைகட்டியுள்ளது. இந்நிலையில், கேரளாவில் இன்று ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது தமிழக கேரள எல்லைப் பகுதியான பாலக்காடு,சித்தூர் தொகுதிக்குட்பட்ட மீனாட்சிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மும்முரமாக நடந்து வருகிறது அதிகாலை முதல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்குகளை உறுதிப்படுத்தி வருகின்றனர். 

ஆனால் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும்,சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நோய்த் தொற்று குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர் இதனை  அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது என்கின்றனர் வாக்களிக்க வந்த  மக்கள் நலம் விரும்பிகள். அதேசமயம் கேரளா தேர்தல் களத்தில்  1,32,83,724 ஆண் வாக்களர்கள், 1,41,62,025 பெண் வாக்காளர்கள், 290 திருநங்கைகள் உள்ளனர் மொத்தம் 957 வேட்பாளர்கள் கேரளாவில் நடக்கும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.


Comments