வாக்கு எண்ணிக்கை நாளன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை!! - தமிழக தலைமை தேர்தல் ஆணையர்!!

     -MMH
     நாடு முழுவதும் கொரோனா 2வது அலை  வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை  (செவ்வாய் ) காலை முதல் அமுலுக்கு வருகின்றன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மே 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை இருப்பதால் அன்று  நிலைப்பாடு என்னவாக இருக்கும் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வாக்கு எண்ணிக்கை நாளன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

-M.சுரேஷ்குமார்.

Comments