கொரோனா தொற்றின் எதிரொலி... புகழ்பெற்ற கோவில்களில் பக்தர்களுக்கு தடை..!!

-MMH

         ந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் உள்ள தஞ்சாவூர் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில்களில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  

-கோபி.

Comments