நீங்க தான் Inspiration என பதிவிட்ட சமூக ஆர்வலருக்கு தனது கடைசி "டிவிட்டை" பாராட்டாக்கிய "விவேக்"!!

     -MMH

     கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நெடுஞ்சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவதை தன்னுடைய பகுதி நேர பணியாக ஏற்றுக்கொண்ட ரசிகர் ஒருவர் “நான் தண்ணீர் விடும் முன் வாடி இருந்த செடிகள் நான் தண்ணீர் ஊற்றிய பின் பூ பூத்து இருப்பதை பார்க்க இனம்புரியாத ஆனந்தம் மனதில் .....நான் இந்த part time வேலையில் சேர நீங்க தான் Inspiration ” என்று ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த நடிகர் விவேக், “இதை நான் மிக உயர்ந்த பாராட்டாக கருதுகிறேன்.! மிக்க நன்றி! எந்த வேலையும் தாழ்வானது அல்ல!!” என்று அந்த ரசிகருக்கு நன்றி கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டு தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

-நவாஸ்.


Comments