திருப்பூர் மாவட்டத்தில் 16 இடங்களில் கொரோனா சிகிச்சை உதவி மையங்கள்!!

   -MMH

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்போர்கள் எந்த பகுதியில், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியும் என்று ஆலோசனை வழங்குவதற்காக மாவட்டம் முழுவதும் 16 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி திருப்பூர் மாநகராட்சியில் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (தொடர்பு எண்: 80729 36742), மேட்டுப்பாளையம் நடுநிலைப் பள்ளி, பி.என்.ரோடு, திருப்பூர் (63790 18626), சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி (73733 25692) ஆகிய இடங்களில் தொடர்பு கொள்ளலாம்.

அதேபோல் ஊரகப் பகுதியில் அவிநாசி வட்டாரம் சேவூர் ஆரம்ப சுகாதார நிலையம் (63694 63608), திருப்பூர் வட்டாரம் பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் (99940 63487), பல்லடம் வட்டாரம் செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் (87782 99140), பொங்கலூர் ஆரம்ப சுகாதார நிலையம் (90951 99423), குடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம் (97902 23004), உடுமலைப்பேட்டை வட்டாரம் எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் (98423 86892), மடத்துக்குளம் வட்டாரம் கொமரலிங்கம் ஆரம்ப சுகாதார நிலையம் (96299 38013), தாராபுரம் வட்டாரம் பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் (98429 63850), மூலனூர் ஆரம்ப சுகாதார நிலையம் (94431 60225), குண்டடம் வட்டாரம் தாயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் (94422 21200), காங்கேயம் வட்டாரம் நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் (94433 42012), ஊத்துக்குளி வட்டாரம் குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் (96293 23231) மற்றும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம் (94866 70999) ஆகிய மையங்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

இந்த உதவி மையங்களில் நோய்த் தொற்று உறுதியானவர்களின் நிலையை பரிசோதனை செய்து அவர்களது நிலைக்கேற்ப அரசு மருத்துவமனைகளுக்கோ கோவிட் சிறப்பு சிகிச்சை மையங்களுக்கோ அல்லது அவர்கள் விருப்பத்தின் பேரில் கோவிட் சிறப்பு சித்த வைத்திய மையத்திற்கோ அனுப்பி வைக்கப்படுவர்.

எனவே நோய்த் தொற்று உறுதியானவர்கள் நேரடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல், தங்களுக்கு அருகாமையில் உள்ள மேற்கண்ட உதவி மையங்களில் மருத்துவர்கள் வழிகாட்டுதல்படி சிகிச்சை பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-குமார்,திருப்பூர். ஈசா.

Comments