கோவையில் 186 செங்கல் சூளைக்கு தடை!!

 -MMH

உரிமம் இல்லாமல் செயல்பட்ட 186 செங்கல் சூளைக்கு தடை விதித்து, மாவட்ட கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டம், சின்னத்தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் மற்றும் பன்னிமடை பகுதிகளில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டது.அந்த உத்தரவின்படி அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் இயக்க தடை செய்து, மாவட்ட நிர்வாகம் கடந்த மாதம் 19ல் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, செங்கல் சூளை உரிமையாளர்கள் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட் ஏப்., 30 லபிறப்பித்த உத்தரவில், அனுமதிபெற்ற செங்கல் சூளை மட்டும் செயல்பட அனுமதிக்கலாம். உரிமம் பெறாத 186 செங்கல் சூளைகளை இயக்குவது சட்ட விரோதமானது என உத்தரவிட்டுள்ளது.

எனவே, செங்கல் சூளைகளை உரிமம் இல்லாமல் இயக்குவது, அனுமதியின்றி சூளைக்கு மண் எடுத்து செல்வது, சுட்ட செங்கலை விற்பனைக்கு எடுத்து செல்வது சட்டப்படிகுற்றமாகும். மீறி செயல்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார்,கோவை மேற்கு.

Comments