18வயதினருக்கு அறிவிக்கபட்டிருந்த தடுப்பூசி , தட்டுப்பாட்டின் காரணமாக தடங்கல்!!

 

-MMH

அதிகரித்துவரும் கொரோனா இரண்டாம் பரவலின் காரணத்தினால் ஏற்பட்ட  பாதிப்பினால் ஒருபுறம் மக்களின் உயிர்கள் பலியாகிவரும் வேளையில் ,  மறுபுறம் கொரோனா பாதிப்பை தடுத்துக்கொள்வதற்காக மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியினை போட்டுக்கொள்கின்றனர். இந்தியாவினை பொறுத்தவரை "கோவேக்சின்" மற்றும் "கோவிஷீல்டு" பயன்பாட்டில் இருந்தாலும் அதிகரித்து வரும் தேவையின் காரணமாக "ஸ்பூட்னிக் வி" என்னும் ரஷ்ய தயாரிப்பும் இன்றுமுதல் இந்தியாவிற்கு வரும் என்ற அறிவிப்பு வெளியாகிய நிலையில் போதிய தடுப்பூசி இல்லாத காரணத்தால் இன்றுமுதல் அறிவிக்கபட்டிருந்த 18 நிரம்பியோருக்கும் தடுப்பூசி என்ற அறிவிப்பு செயல்படுத்த இயலாமல்  இருக்கின்றது.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது "முன்னதாக 1.5 கோடி தடுப்பூசிகளுக்கான ஆர்டர் 'சீரம் மற்றும் பாரத் பயோடெக்' நிறுவனங்களுக்கு தமிழகத்திலிருந்து கொடுக்கபட்டிருந்தது, இதுகுறித்த பதில் அவர்களிடம் வரவில்லை" என்றார். சுகாதாரத்துறையின் தடுப்பூசி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்  "தமிழகத்தில் 5.20 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் - 1.49 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளும் இருப்பில் உள்ளதாகவும் , ஆனால்  31.80 லட்சம் நபர்கள்  இரண்டாம் டோஸ்க்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் இதுவரை தமிழகம் 12.94 லட்சம் இரு டோஸ்களை பெற்றிருப்பதாகவும் "  கூறியுள்ளது.

இதன்படி பார்த்தால் தமிழகத்தில் 45க்கும் மேற்பட்ட வயதினருக்கு போதிய தடுப்பூசி இல்லை என்பது ஊர்சிதமாகியுள்ளது , இந்நிலையில் 18 வயது மேற்ப்பட்டவர்களும் எப்படி தடுப்பூசி கிடைக்கும்??  ஏற்கனவே டெம்டெசிவிர் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி எழுந்துவரும் நிலையில் தடுப்பூசியின் பற்றாக்குறையும் மக்களிடம் மேலும் கொரோனா பீதியினை ஏற்படுத்தவே செய்துள்ளது.

-நவாஸ்.

Comments