கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 பேருந்துகள்!கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனம் – தொழில் முனைவோர் கூட்டமைப்பு உதவி!

-MMH

               கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 பேருந்துகள் செயல்பாட்டிற்கு வந்தது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டது. இதனால், படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், படுக்கை கிடைக்காமல் மருத்துவமனைகளில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் நோக்கத்தில் கோவையை சேர்ந்த கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனம் – தொழில் முனைவோர் கூட்டமைப்பு இணைந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 பேருந்துகளை வடிவமைத்து வந்தது. பணிகள் முழுமையடைந்ததை அடுத்து, நேற்று 2 பேருந்துகளும் கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் தலா 12 பேர் வீதம் 24 நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.

இதுகுறித்து பேசிய கோவை மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இந்த 2 பேருந்துகளும் அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தப்படு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும், பேருந்துகளுக்கு தேவையான ஆக்சிஜனை சேவா கேசஸ் நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவித்தார்.

-சோலை. ஜெய்க்குமார்/Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments