கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனை!!

      -MMH

கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனை யானது. தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் மது வாங்க கூட்டம் அலைமோதியது.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 293 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அது, நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவை வடக்கில் உள்ள 158 கடைகளில் ஒரே நாளில் ரூ.16 கோடியே 50 லட்சத்துக்கும், கோவை தெற்கில் உள்ள 135 டாஸ்மாக் கடைகளில் ரூ.14 கோடியே 50 லட்சத்திற்கு மது விற்பனையானது. அந்த வகையில்  நேற்று ஒரே நாளில் ரூ.31 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments