பொள்ளாச்சி பகுதியில் மட்டும் 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொள்ளாச்சி பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 ஆயிரத்து 34 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 383 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது என்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி பகுதிகள்:
1. வெங்கடேசா காலனி,
2.அழகப்பா லே-அவுட்,
3.கொங்குநகர்,
4.டி.கோட்டாம் பட்டி,
5.எஸ்.ஆர்.லே அவுட்,
6.பாலக்காடு ரோடு,
7.மகாலிங்கபுரம்,
8.கோவை மெயின் ரோடு,
9.ஜோதிநகர்,
10.பி.கே.எஸ். காலனி ஆகிய பகுதிகளில் 18 பேருக்கு கொரோனா உறுதியானது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில்:
1.ஊஞ்சவேலாம்பட்டி,
2.மாக்கினாம்பட்டியில் தலா 3 பேருக்கும்.
3.ஜமீன் ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி மின்நகரில் தலா 2 பேர்,
4.சீனிவாசபுரத்தில் 7 பேர்.
5.சூளேஸ்வரன்பட்டியில் 5 பேருக்கும் தொற்று உறுதியானது.
சீலக்காம்பட்டி, ஏ.நாகூர், நல்லாம்பள்ளி , வஞ்சியாபுரம் , அகிலாண்டபுரம், குஞ்சிபாளையம் , தேவநல்லுார் , கோலார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் 32 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் 12 பேருக்கும், ஆனைமலை ஒன்றியத்தில் 28 பேர் என பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு சுகாதார துறை கூறும் அறிவுரைகள் விதிமுறைகள் கேட்டு மக்கள் அதை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments